நியூசிலாந்தில் கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில், தங்கள் தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தபோது, கோலின் மண்வெட்டி கொண்டு நிலத்தை வெட்டிய போது கீழே ஏதோ ஒரு பொருள் தட்டுப்படுவதாக உணர்ந்தார்.
இதுகுறித்து தனது மனைவியிடமும் தெரிவதை தொடர்ந்து இருவரும் எது என்ன என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். அந்த பொருளை சுற்றியுள்ள மண்ணை முதலில் தோண்ட தொடங்கினர். அப்போது ஏதோ விசித்திரமாக வளர்ந்திருப்பதை பார்த்து பூஞ்சை வளர்ச்சியா? என சந்தேகித்தனர். கொலின் அதன் மேற்புறத்தை துடைத்துவிட்டு தனது தோட்டத்து முட்கரண்டியால் அந்த பொருளில் தோலில் சிறிது கீறிவிட்டு ஒரு சிறு துண்டை எடுத்து சுவைத்துள்ளார். பின்னர் அது உருளைக்கிழங்கு என்பது இருவருக்கும் தெரியவந்துள்ளது.
உருளைக்கிழங்கு மிகப் பெரியதாக இருந்தது, எங்களால் இதனை நம்ப முடியவில்லை என டோனா கூறினார். மேலும் அந்த உருளைக்கிழங்கு ஒரு சரியான வடிவத்தில் இல்லை என்றும், அதன் தோற்றம் அசிங்கமானதாக இருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்கள் கேரேஜில் வைத்து அந்த உருழைக்கிழங்கை கொண்டு சென்று எடை போட்டு பார்த்துள்ளனர். அதில் உருழைக்கிழங்கானது 7.9 கிலோகிராம் (17.4 பவுண்டுகள்) எடை கொண்டது என தெரியவந்தது. இது வழக்கமான உருளைக்கிழங்கை போல அல்லாமல் மிகப்பெரியதாக இருந்துள்ளது. அதாவது ஒரு சிறிய நாய் அளவிற்கு இந்த உருளைக்கிழங்கு இருப்பதாக கொலின் கூறியுள்ளார்.
ALSO READ | 30 ஆண்டுகளாக குடிநீராக டாய்லெட் தண்ணீர் விநியோகம் - ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்!
ஹாமில்டனுக்கு அருகிலுள்ள கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் தம்பதியினரின் சிறிய பண்ணையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று இந்த உருளைக்கிழங்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து சில வாரங்களில், இந் உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த உருளைக்கிழங்கிற்கு டக் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் கொலின், டக்கை சுமந்து செல்லும் வகையில் ஒரு சிறிய வண்டியை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்த அனைத்து புகைப்படங்களையும் கொலின் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது எல்லாம் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் மக்களை மகிழ்விப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கொலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உருளைக்கிழங்கு இவ்வளவு பெரியதாக வளர தன்னிடம் ரகசிய தோட்டக்கலை குறிப்புகள் எதுவும் இல்லை என்று கூறும் கொலின், வழக்கமாக தங்கள் தோட்டத்தில் மாட்டு எருவை உரமாக பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது களை எடுப்பதற்கு முன்பு தங்கள் தோட்டத்தில் வெள்ளரிகளை பயிரிட்டிருந்ததாகவும், உருளைக்கிழங்குகளை பயிரிடவில்லை என்றும் அவர் கூறினார். டக் சுயமாக வளர்ந்திருக்க வேண்டும், இது எனக்கும் மர்மமாகவே இருக்கிறது என்றும் இது இயற்கையின் இன்பமான ஆச்சரியங்களில் ஒன்றாகும் என்றும் கொலின் கூறினார்.
டக்கிற்கு அங்கீகாரம் பெற கின்னஸுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களால் முடிந்த அளவிற்கு சுத்தம் செய்து டக் தற்போது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுவதாகவும், எனினும் முன்பை விட ஒரு கிலோ எடை குறைந்துள்ளதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
முன்னதாக 2011ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஒரு உருழைக்கிழங்கு 5 கிலோவுக்கும் குறைவான எடை இருந்ததனால் கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.