'உலகின் அழிவு நாள்'-ஐ குறிக்க ஆங்கிலத்தில் டூம்ஸ் டே என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களின் தவறான செயல்களால் உலகம் அழிவு பாதைக்கு செல்கிறது என்பதை விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் காலம்தோறும் மனித குலத்திற்கு எச்சரித்து வருகின்றனர். போர்கள், இயற்கை பேரிடர்கள், ஆபத்தான அறிவியல் சோதனைகள் போன்றவற்றால் ஒட்டுமொத்த மனித இனமே பாதிப்புக்கு ஆளாகும்.
எனவே, மனித இனத்திற்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட் என்ற விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு 1947ஆம் ஆண்டில் டூம்ஸ் டே கடிகாரம் என்ற கடிகாரத்தை வடிவமைத்தனர். அல்பெர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து வடிவமைத்த இந்த கடிகாரம் உலகின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை பிரதிபலிக்கும். ஆண்டுதோறும் உலகின் முன்னணி விஞ்ஞானிகள் இந்த கடிகாரத்தின் முள்ளை மாற்றி அமைப்பார்கள். இந்த டூம்ஸ் டே கடிகாரத்தில் மணி நள்ளிரவு 12ஐ தொட்டால் உலகம் அழிவு தினத்தை அடைந்துவிட்டது எனப் பொருள். கடிகார முள் 12 மணிக்கு அருகே இருந்தால் உலகின் நிலை மோசமாக இருப்பதாக பொருள். எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அவ்வளவு நலமாக உலகம் செயல்படுகிறது என்று கருதப்படும்.
இந்நிலையில், இந்தாண்டு கடிகார முள்ளை விஞ்ஞானிகள் 12 மணிக்கு மிக நெருக்கமாக வைத்துள்ளனர். அதன்படி, கடிகார முள் 12 மணியை நெருங்க 90 நொடிகளே உள்ளன. இதன் மூலம் உலகம் அழிவுக்கு அருகே உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவல், ரஷ்யா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் என பல நெருக்கடிகளை உலகம் சந்தித்து வருவதால் மிக மோசமான சூழல் நிலவுவதாக விஞ்ஞானிகள் கடிகார முள்ளை இவ்வளவு நெருக்கமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு முன்னர் சோவித் ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த போது தான் கடிகார முள் நெருக்கமாக இருந்துள்ளது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய பீதி குறைந்தது.
2020ஆம் ஆண்டில் 100 நொடிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 நொடிகள் குறைத்து 90 நொடிகளில் வைக்கப்பட்டுள்ளது.உலக நாடுகளின் போர் தாக்குதல்கள், கால நிலை மாற்றம் போன்றவற்றை அனைவரும் ஒன்றிணைந்து சீர் செய்தால் மட்டுமே மனித இனம் நலமுடன் வாழ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scientist, Viral News