ஹோம் /நியூஸ் /உலகம் /

நிதி நிலைமை சரியில்லை... மக்களே கார், டிவி, பிரிட்ஜ் எல்லாம் வாங்க வேண்டாம் - அமேசான் ஓனர் அறிவுரை

நிதி நிலைமை சரியில்லை... மக்களே கார், டிவி, பிரிட்ஜ் எல்லாம் வாங்க வேண்டாம் - அமேசான் ஓனர் அறிவுரை

 அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ்

அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ்

கார்,டிவி, பிரிட்ஜ் போன்ற பொருள்களை எல்லாம் தற்போதைய சூழலில் வாங்க வேண்டாம் என உலகின் பெரும் பணக்காரர் அறிவுரை கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaSan FranciscoSan FranciscoSan Francisco

  உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதற்கு கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை பிரதான காரணமாக உள்ளது. இந்த இரு பெரும் நிகழ்வுகளின் சங்கிலி விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது சர்வதேச நாடுகளை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.

  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதம் கடும் உயர்வைக் கண்டு பொருளாதார மந்த நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலை காரணம் காட்டி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "அமெரிக்காவில் பண்டிகை விடுமுறை காலம் வரும் நிலையில், மக்கள் புதிய கார்கள், டிவிக்கள், பிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்க வேண்டாம்.

  அமெரிக்கா மந்த நிலையை நோக்கி செல்கிறது.எப்போது வேண்டுமானாலும் பிரச்னை தலைதூக்கலாம். எனவே, பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மிகப்பெரிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தால், அதை ஒத்திப்போடுங்கள். நிலைமை எப்படி இருக்கிறது என்று கவனித்து பார்த்து பின்னர் முடிவெடுங்கள். வாகனம், பிரிட்ஜ் என்று மற்ற எந்த பொருள்களாக இருந்தாலும் இதையே பின்பற்றுங்கள்" என்று எச்சரித்துள்ளார். பல முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கைகளையும் உதாரணம் காட்டி ஜெப் தனது அறிவுரையை பகிர்ந்துள்ளார்.

  இதையும் படிங்க: சீனாவில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா... மக்கள் வெளியேற பல்வேறு கட்டுப்பாடுகள்

  உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரே பொருள்களை யோசித்து வாங்குங்கள், பணத்தை சேமித்து வையுங்கள் எனக் கூறியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amazon, Jeff Bezos