மர்ம கடிதத்தால் மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்!

news18
Updated: February 13, 2018, 10:32 AM IST
மர்ம கடிதத்தால் மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்!
ஜூனியர் டிரம்ப் மற்றும் வெனிசா
news18
Updated: February 13, 2018, 10:32 AM IST
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வந்த மர்ம கடிதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகள் டொனால்டு டிரம்ப் ஜூனியர். டொனால்டு ஜூனியரின் மனைவி வெனிசா. இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த திங்கட்கிழமை வெனிசாவுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை பிரித்துப் பார்க்கையில் அதில் வெள்ளைப்பவுடர் இருந்தது. அந்த கடிதத்தை பிரித்த சிறிது நேரத்திலேயே வெனிசாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இந்த கடிதத்தில் விஷத்தன்மை இருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கடிதம் வந்த போது வீட்டிலிருந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடிதத்தில் உள்ள வெள்ளைப்பவுடரை சோதித்துப் பார்த்த அதிகாரிகள் அதில் விஷத்தன்மை ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிவீட் செய்துள்ள ஜூனியர்  டிரம்ப், ``அச்சத்துக்குரிய இந்த சம்பவத்திலிருந்து வெனிசாவும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். இந்த முறையில் எதிர்ப்பை தெரிவிப்பது முறையற்றது’’ என பதிவிட்டுள்ளார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...