கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அவரின் வயது, உடல் பருமன், ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர். எனினும் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கொரொனா வைரஸால் அமெரிக்காதான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. தேர்தலை சந்திக்க உள்ள அமெரிக்காவில் கொரோனா சவாலாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொண்டு ஆட்சியை தக்கவைக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருகிறார். இந்நிலையில்தான் ட்ரம்புக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவதால், 74 வயதாகும் ட்ரம்புக்கு இது சவாலான தருணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “டிரம்புக்கு முதலில் அவரது வயதுதான் முதன்மையான ஆபத்து காரணியாக இருக்கும். டிரம்ப் உடல் பருமனாகவும் இருக்கிறார். பி.எம்.ஐ. என அழைக்கப்படும் உடல் நிறை குறியீட்டு எண் 30-ஐ தாண்டி உள்ளது. உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் வெளிப்பாடுதான். கொழுப்பு கூடுதலாக இருக்கிறது. இதை குறைக்க மருந்து எடுத்துக்கொள்கிறார். இந்த நிலை, கொரோனா வைரஸ் தொற்று சிக்கல்களுக்கான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளனர்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.