மருந்துகளை அனுப்பாவிட்டால்..! - இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல்..!

டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

மருந்துகளை அனுப்பாவிட்டால்..! - இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல்..!
  • Share this:
கொரோனா தடுப்புக்காக தாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பாவிட்டால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவிற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியும் இரு நாடுகளும் இணைந்து கொரோனாவை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் பெற அனுமதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்காத பட்சத்தில், அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading