பேட்மேன் தீம் மியூசிக்கில் ’சீன்’ போட நினைத்த ட்ரம்ப்... காப்பிரைட் பிரச்னையால் ’பல்பு’ வாங்கிய அவலம்!

இதுபோல், பிரபல பாடல்களை பின்னணியாகக் கொண்டு ட்விட்டரில் அலப்பறை செய்து வரும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க இசையமைப்பாளர்கள் பலரும் காப்பிரைட் பிரச்னையை எழுப்பி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: April 10, 2019, 3:46 PM IST
பேட்மேன் தீம் மியூசிக்கில் ’சீன்’ போட நினைத்த ட்ரம்ப்... காப்பிரைட் பிரச்னையால் ’பல்பு’ வாங்கிய அவலம்!
ட்ரம்ப் (Image: Reuters)
Web Desk | news18
Updated: April 10, 2019, 3:46 PM IST
ட்விட்டரில் பயங்கர ஆர்வமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது அலப்பறையால் ‘பல்பு’ வாங்க தற்போது நெட்டிசன்களால் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக உள்ளவர் டொனால்டு ட்ரம்ப். வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் ட்விட்டரில் வெளியிட்டுவிடுவார் ட்ரம்ப். முக்கிய அறிவிப்புகளிலிருந்து பதவி பறிப்புகள் வரை ட்விட்டரிலேயே ஆட்சி நடத்தி முடித்துவிடுவார்.

வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்காகத் தயாராகி வரும் ட்ரம்ப் வழக்கத்தைவிடவும் ட்விட்டரில் அதிக சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார். இந்த வரிசையில், தனது அலுவலகத்தில் தான் பணியும் செய்யும் அழகை பேட்மேன் மீயூசிக் தீம் உடன் வீடியோ பெர்ஃபார்மன்ஸ் ஆக ட்விட்டரில் வெளியிட்டார்.
Loading...ஆனால், பரிதாபகரமாக ட்விட்டர் காப்பிரைட் பிரச்னையால் வீடியோ முடக்கப்பட்டது. இதுபோல், பிரபல பாடல்களை பின்னணியாகக் கொண்டு ட்விட்டரில் அலப்பறை செய்து வரும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க இசையமைப்பாளர்கள் பலரும் காப்பிரைட் பிரச்னையை எழுப்ப தற்போது ட்விட்டரே முடக்கம் செய்தது பெரும் கேலிக்குரிய விஷயமாக சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.

மேலும் பார்க்க: சீமான் பிரசார பேச்சை ரசித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர்!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...