தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டும் #Metoo-வில் புகார் தெரிவியுங்கள் - மெலானியா டிரம்ப்!

news18
Updated: October 11, 2018, 12:03 PM IST
தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டும் #Metoo-வில் புகார் தெரிவியுங்கள் - மெலானியா டிரம்ப்!
மெலானியா ட்ரம்ப்
news18
Updated: October 11, 2018, 12:03 PM IST
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் ’மீ டூ’ (Me too) மூமென்ட்- ல் புகார் அளித்தால், அதற்கு தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என மெலானியா டிரம்ப் வலியுறுத்துயுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில், ’மீ டூ’ (Me too) மூமென்ட் பற்றி பேசினார். அதில் "பெண்கள் யார் வேண்டுமென்றாலும் தனக்கு நிகழ்ந்துள்ள பாலியல் தொந்தரவுகள் குறித்து எழுதலாம், அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” . ஆனால் அந்த பாலியல் புகாருக்குரிய தகுந்த ஆதாரத்தை அவர்கள் வைத்திருக்க  வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால் பாலியல் துன்புறுத்தல்களால் குற்றம் சாட்டப்பட்ட செய்திகளில் ஆண்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்று கூறினார். மேலும் ​​புகாரை ’மீ டூ’ (Me too) மூமென்ட்-ல் பதிவிடுபவர்கள், நானும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தேன் என்று போகிற போக்கில் கூறிவிடக்கூடாது என்றும் அதற்கான ஆதாரங்களுடன் பதிவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏனென்றால் சில நேரங்களில் ஊடகங்கள் மிக அதிகமாக கதைகளை புனைந்து சித்தரிக்கின்றன. அது சரியானதல்ல என்று கூறினார். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான ஒரு இயக்கமாக ’மீ டூ’ (Me too) மூமென்ட் ஆரம்பமான போது, பாலியல் சம்பந்தமான பலவிதமான சம்பவங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க் பத்திரிக்கைகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ...

இந்தியாவிற்கும் வந்து விட்டது #MeToo : மேனகா காந்தி
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...