செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா - விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்!

ட்ரம்ப் இந்த ட்விட்டர் பதிவை வெளியிடக் காரணம் நாசா அட்மின் ஜிம் பிரிடன்ஸ்டைன் தான்.

Web Desk | news18
Updated: June 8, 2019, 2:56 PM IST
செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா - விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்!
ட்ரம்ப் (Image : AP)
Web Desk | news18
Updated: June 8, 2019, 2:56 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து தனது அறிவாற்றலால் மக்களைச் சிரிக்கவைத்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் செலவு செய்யும் பணத்துக்கு நாசா இன்னமும் நிலாவுக்குச் செல்லப்போவதாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது- நாம் இதை 50 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டோம்.

நாசா இன்னும் மிகப்பெரும் விஷயங்களான செவ்வாய் (இதன் ஒரு பகுதியான நிலவு), பாதுகாப்பு மற்றும் அறிவியல் மீது கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் இந்த ட்விட்டர் பதிவை வெளியிடக் காரணம் நாசா அட்மின் ஜிம் பிரிடன்ஸ்டைன். கடந்த வியாழக்கிழமைதான் ’ட்ரம்ப் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினால் மட்டுமே 2024-ம் ஆண்டு நம்மால் நிலவில் கால்வைக்க முடியும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்க வந்து கடைசியில் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலவு என ட்ரம்ப் கூற அமெரிக்க அதிபரின் அறிவியல் அறிவை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை- விளாடிமிர் புடின்

First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...