ஆங்கில திரைப்படத்தின் காட்சியில் தன் முகத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்! ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

ராணுவ வீரர்கள் முன்னால் நின்று பேசுவது போலவும் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ட்ரம்ப் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கில திரைப்படத்தின் காட்சியில் தன் முகத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்! ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
ட்ரம்ப்
  • Share this:
கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், படக் காட்சி ஒன்றில் தன்னுடைய முகத்தை வைத்து எடிட் செய்யப்பட்டிருக்கும் காட்சியை ட்ரம்ப் பதிவிட்டதை நெட்டிசன்கள் கடுமையாக டிரோல் செய்துள்ளனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 15,00,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

இந்தநிலையில், ஹாலிவுட்படமான இன்டிபென்டென்ஸ் டே படத்தில் அமெரிக்க அதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பில் புல்மேன், உலகத்தின் மீது ஏலியன்கள் தாக்குதல் நடைபெறும்போது ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசுவார். அந்தக்காட்சிகளுக்கு நிறைய கைதட்டல்கள் கிடைத்தன. இந்தக் காட்சியில் பில் புல்மேனின் முகத்தில் தன்னுடைய முகம் இருப்பதுபோன்றும், தான் ராணுவ வீரர்கள் முன்னால் நின்று பேசுவது போலவும் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ட்ரம்ப் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தன்னைத் தானே பெருமைப்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட ட்ரம்பை நெட்டிசன்கள் கடுமையாக டிரோல் செய்துவருகின்றனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Also see:
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading