ஹோம் /நியூஸ் /உலகம் /

புதிய குடியேற்றக் கொள்கையை வெளியிட்டார் டொனால்டு டிரம்ப்!

புதிய குடியேற்றக் கொள்கையை வெளியிட்டார் டொனால்டு டிரம்ப்!

ட்ரம்ப். (Reuters)

ட்ரம்ப். (Reuters)

வெளிநாடுகளில் திறன் வாய்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாகவும், அதேபோல அமெரிக்காவிலும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கையை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டார். அதில், அதிதிறன் பெற்ற தொழிலாளர்களுக்கு அதிக அளவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுபேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதிய குடியேற்ற கொள்கையை வெள்ளை மாளிகையில் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர், முற்றிலும் செயல்படாமல் உள்ள சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகளை நவீனப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். எல்லையின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அகதிகளாக வர விரும்புவோரின் எண்ணிக்கையை குறைக்க போவதாகவும் அவர் கூறினார்.

புதிய கொள்கையின்படி, நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவோரின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், தொழில் நிபுணர்கள், உயர் படிப்பை முடித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

ஆங்கில மொழி திறன், வேலைவாய்ப்பு ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே அமெரிக்காவில் வசிப்பவர்களின் உறவினர்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, தகுதி அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு வழங்கப்படும் நிலையில், இது 57 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். வெளிநாடுகளில் திறன் வாய்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாகவும், அதேபோல அமெரிக்காவிலும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

Also see... இந்தியாவுக்காக தயாரிக்கும் எஃப்-21 விமானத்தை, வேறு யாருக்கும் விற்பனை செய்யமாட்டோம்: அமெரிக்கா

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Donald Trump, US