ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்திய - அமெரிக்க வர்த்தக உறவில் சிக்கல்... ’செக்’ வைத்த ட்ரம்ப்!

இந்திய - அமெரிக்க வர்த்தக உறவில் சிக்கல்... ’செக்’ வைத்த ட்ரம்ப்!

வெள்ளை மாளிகையில் மோடி - ட்ரம்ப் (கோப்புப் படம்)

வெள்ளை மாளிகையில் மோடி - ட்ரம்ப் (கோப்புப் படம்)

இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகப்படியாக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு உள்ள சுங்கவரி விலக்கை நீக்குவதற்குத் தயாராகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியா கடந்த 1970-ம் ஆண்டு அமெரிக்கா உடன் வர்த்தக இணக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சுங்கவரிக் கட்டணம் விதிக்கப்படவில்லை.

ஆனால், இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகப்படியாக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால், அமெரிக்காவின் ஜிஎஸ்பி என்னும் வரிவிலக்கு முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கத் தயாரகியுள்ளது அமெரிக்கா.

இதுகுறித்து அமெரிக்கா இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அளித்த 60-ம் நாளிலிருந்து எவ்வித வரிச்சலுகையும் இந்தியாவுக்கு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் இறக்குமதி சலுகைத் திட்டத்தின் மூலம் அதிகம் பயன் அடைந்து வருகிறது இந்தியா. தற்போது ட்ரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவுக்குத் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: அணு ஆயுத ஒழிப்பு... டிரம்ப்-கிம் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump