ஹோம் /நியூஸ் /உலகம் /

’ஹூவே மீது கவனம் இருக்கட்டும்’- பிரிட்டனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

’ஹூவே மீது கவனம் இருக்கட்டும்’- பிரிட்டனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ட்ரம்ப்

ட்ரம்ப்

“இன்னும் ஹூவே நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து நாங்கள் முழுமையாகப் பரிசீலிக்கவில்லை” என்று பிரிட்டன் கூறியுள்ளது

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐக்கிய நாடுகளுக்குள் சீன நிறுவனமான ஹூவேயின் நுழைவையும் அதனது 5-ஜி தொழில்நுட்பத்தையும் கவனமுடன் கையாளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹூவே நிறுவனம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு டெக் நிறுவனம் என அமெரிக்கா எழுப்பி வரும் சந்தேகத்திற்குரிய கருத்தை சீனாவும், ஹூவே நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தைக் களமிறக்கும் வாய்ப்பு ஹூவே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனை எச்சரிக்கும் வகையில் ட்ரம்ப், “பிரிட்டனுடன் நெருங்கிப் பணியாற்றும் ஒரு நுண்ணறிவுப் பிரிவு இருப்பது உங்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் சொல்கிறேன், பிரிட்டன் ஹூவே நிறுவனத்தை நாட்டுக்குள் விடும் சூழலில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பதிலளிக்கையில், “இன்னும் ஹூவே நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து நாங்கள் முழுமையாகப் பரிசீலிக்கவில்லை. அப்படி வரும் டெக் நிறுவனத்துக்கான கட்டுப்பாடுகளும் கடுமையானதாகத் தான் இருக்கும்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: ’தேர்தலில் ஜெயிக்க ரஷ்யா உதவியது’- அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சை மாற்றிய ட்ரம்ப்!

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump