வெளிநாட்டு பணியாளர்களுக்கான எச்1 பி உள்ளிட்ட பல விசாக்கள் ரத்து - டிரம்ப் உத்தரவு

அதிபர் டிரம்ப்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்1 பி விசாவை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த விசாவால் உள்நாட்டு ஊழியர்களின் வேலை பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் டிரம்ப் பல முறை குற்றம் சாட்டி வந்தார். எனினும், தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்களுக்கான எச்-1பி விசா வழங்குவதை அவர் ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார். H2B, L மற்றும் ஜே பிரிவு விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.




    படிக்கஉடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

    படிக்கபேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா... பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் பாதி வழியில் இறங்கியதால் பதற்றம்








    அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே, குடியுரிமை விதிகளில் பல திருத்தம் செய்த டிரம்ப், உள்ளூர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டு வந்தார்.

    அங்கு ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், சம்பளம் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டவர்கள் 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கையால் 5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
    Published by:Sankar
    First published: