அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க ட்ரம்ப் திட்டம்

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • Share this:
உலகில் அதிவேகமாக பலராலும் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலி அண்மையில் இந்திய-சீன போர்ப்பதற்றத்தை அடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது.

இந்நிலையில் டிக்டாக்கின் தாய் நிறுவனமாக கருதப்படும் பைட் டான்ஸ் நிறுவனம் சீன அரசுக்கு உளவு பார்க்க உதவ டிக்டாக் செயலியை பயன்படுத்துவதாக அமெரிக்காவிலும் புகார் எழுந்தது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அறிவித்தார்.



மேலும் படிக்க...இந்தியா: ஒரேநாளில் 57,000-ஆக உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை..


ஆனால் டிக்டாக் செயலி பொழுதுபோக்குக்காகவும், திறமைகளை வெளிகொண்டு வரும் மேடையாக மட்டுமே இருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்று கூறியுள்ள டிக்டாக் நிறுவன அதிகாரிகள், உலகம் முழுக்க டிக்டாக் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading