எங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்

சீனாவால், அமெரிக்காவிற்கு அதிக வரி கிடைப்பதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated: July 16, 2019, 5:37 PM IST
  • Share this:
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைக் கண்டதற்கு, தங்களுடனான வர்த்தகப் போரே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

சீன பொருளாதாரத்தில் 2-ஆம் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி, 6.4 விழுக்காட்டில் இருந்து 6.2 விழுக்காடாக குறைந்துள்ளது.

1992-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே சீனாவின் மிகக் குறைவான வளர்ச்சியாக கருதப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், அதிக வரி காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறியதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

அதே சமயம், சீனாவால், அமெரிக்காவிற்கு அதிக வரி கிடைப்பதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்