ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்: 1500 படைகளை அனுப்ப ட்ரம்ப் தயார்..!

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்: 1500 படைகளை அனுப்ப ட்ரம்ப் தயார்..!

ட்ரம்ப்  (REUTERS)

ட்ரம்ப் (REUTERS)

தற்போது வரையில் மத்திய கிழக்குப் பகுதிகளில் 600 படைகள் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி 1,500 ராணுவப் படைகளை அனுப்பத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி 1,500 படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜப்பான் நாட்டுக்கு இன்று சுற்றுப்பயணம் கிளம்பும் முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அளித்துள்ள பேட்டியில், “மத்திய கிழக்குப் பகுதிகளில் நமக்குப் பாதுகாப்புத் தேவை. பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே மிகச்சிறிய அளவிலான படைகளை மட்டும் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போதைய சூழலில் ஈரான் போர் சூழ்நிலையை விரும்பாது என்றே நினைக்கிறேன். குறிப்பாக எங்கள்உடன் போரிட அவர்கள் விரும்பவேமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களிடம் அணு ஆயுதம் எதுவும் இல்லையே. இதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘தற்போது வரையில் மத்திய கிழக்குப் பகுதிகளில் 600 படைகள் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 900 முதல் 1500 வரையிலான படைகளை மட்டுமே அனுப்ப உள்ளோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: தமிழக விவசாயி தற்கொலை: ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்கு விருது!

First published: