ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவனை கொல்ல உதவிய நாய்..! டிரம்ப் நெகிழ்ச்சி

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவனை கொல்ல உதவிய நாய்..! டிரம்ப் நெகிழ்ச்சி
  • Share this:
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டபோது அமெரிக்கப் படைக்கு உதவிய நாயை பாராட்டி அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

பக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து பின்னர் அவரை விரட்டியபடி முன்னேறிய அந்த நாய், தன் மீது கட்டியிருந்த வெடிகுண்டை பக்தாதி வெடிக்கச் செய்தபோது காயமடைந்தது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், பக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய தீரமான நாய் இதுதான் எனக் கூறி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதன் பெயரை அவர் வெளியடவில்லை. எனினும் இது பெல்ஜியன் மேலிநோய்ஸ் வகையை சேர்ந்தது என்றும் கோனன் என்றழைக்கப்பட்ட பெண் நாய் என்றும் கூறப்படுகிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் கோனன் ஓபிரையன் நினைவாக அப்பெயரிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Watch : ஆழ்துளை கிணறுகள்: சட்ட விதிகள் சொல்வது என்ன?

First published: October 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்