ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: ட்ரம்ப் சொல்லும் காரணம் என்ன?

’பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் என்றாலும் அமெரிக்க ராணுவ விதிப்படி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன’.

Web Desk | news18
Updated: June 6, 2019, 7:47 PM IST
ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: ட்ரம்ப் சொல்லும் காரணம் என்ன?
ட்ரம்ப் (Image : AP)
Web Desk | news18
Updated: June 6, 2019, 7:47 PM IST
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்குத் தடை விதித்ததற்கான காரணத்தைப் பகிர்ந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

அமெரிக்க ராணுவக் கட்டுப்பாடுகள் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அதில் ட்ரம்ப், “அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகள் அதிகமாக ஊக்கமருந்து எடுத்துக்கொள்கிறார்கள். ராணுவத்தில் இருப்பவர்கள் போதைப் பொருள், ஊக்கமருந்து, மாத்திரைகள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாத்திரைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் உள்ளன” என்றார்.

மேலும் ட்ரம்ப் கூறுகையில், “ஆனால், திருநங்கைகள் ஆப்பரேஷன் செய்துகொண்ட பின்னர் நிச்சயம் மாத்திரைகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. வேறு வழி இல்லை. அமெரிக்க ராணுவம் தற்போது சிறப்பான நிலையில் உள்ளது. அதை அப்படியே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் என்றாலும் அமெரிக்க ராணுவ விதிப்படி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன” என்றார்.

மேலும் பார்க்க: ’ஹூவே மீது கவனம் இருக்கட்டும்’- பிரிட்டனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...