`வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் ஜோங்குடன் சந்திப்பு’

news18
Updated: March 13, 2018, 5:38 PM IST
`வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் ஜோங்குடன் சந்திப்பு’
கிம் ஜோங் மற்றும் டிரம்ப்
news18
Updated: March 13, 2018, 5:38 PM IST
வட கொரியா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் ஜோங்கை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பார் என்று வெள்ளை மாளிகையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் தொடர்ச்சியாக அனு ஆயுத சோதனைகள் நடத்தி வந்ததால் இருநாடுகளுக்கு இடையே ஒரு அச்சுறுத்தலான சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திப்பதற்கு அழைப்பும் விடுத்தார். இதையடுத்து ட்ரம்பும் கிம் ஜோங்கை சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகையிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “ட்ரம்ப் சந்திப்பு தொடர்பான வட கொரியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். வட கொரியா அதிக வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அந்த வாக்குறுதிகளை வட கொரிய நிறைவேற்றும் பட்சத்தில் கிம் ஜோங் - ட்ரம்ப் சந்திப்பு திட்டமிட்டப்படி நடைபெறும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங்குடான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கூறுகையில்,``வட கொரிய அதிபருடனான சந்திப்பில் எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம் அல்லது உலக நாடுகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஏதேனும் ஒப்பந்தங்கள் போடப்படலாம்’’ என்று கூறியிருந்தார்.

 
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்