ஹோம் /நியூஸ் /உலகம் /

நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான வெள்ளை மாளிகை ஓவியம்

நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான வெள்ளை மாளிகை ஓவியம்

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவியம்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவியம்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் டொனால்ட் தன் ஆட்சிக்குப் பின் வெள்ளை மாளிகையில் இருந்த ஓவியங்களை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமீபத்தில் மாற்றினார்.  ஞாயிறு அன்று ’60 நிமிடங்கள்’ (60 Minutes) என்ற  ட்ரம்ப்பின் பேட்டி  ஒன்று வெளியானது. அதில் ட்ரம்ப்க்கு பின்னால் நிற்கும் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியம்தான் தற்போது ட்ரம்பை பற்றிய ஹாட் டாப்பிக்காக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

அந்த ஓவியத்தை ’தி ரிபபளிக்கன் கிளப்’ ( The Republican Club) என்று குறிப்பிடுகின்றனர். ஓவியர் ஆண்டி தாமஸ் என்பவர் வரைந்துள்ள, இந்த ஓவியத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஆப்ரகாம் லிங்கன், புஷ், நிக்ஸன், ரூஸ்வெல்ட், ஃபோர்ட், ரோனால்ட் ரீகன், உள்ளிட்ட பலரும் பேசி சிரித்தபடி மதுஅருந்தும் காட்சியை ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர். அந்த ஓவியத்தில் ட்ரம்ப் ஸ்லிம்மாகவும் மற்றவர்கள் முன்னிற்கும் மது கோப்பைகள் எதுவும் அவரின்முன் இல்லை. வெறும் கூல் ட்ரிங்ஸ் நிரம்பிய கோப்பை மட்டுமே  இருக்கிறது.

ஓவியத்தில் இருக்கும் சின்ன சின்ன டீடெய்ல்கள்தான் ட்ரம்பை கடும் கேலிக்குள்ளாக்கியுள்ளது. ஓவியத்தில் ஸ்லிம்மாக இருக்கும் ட்ரம்பை கேலி செய்வது போல் ட்விட் அமைந்துள்ளது.

தற்போது இருக்கும் ட்ரம்பின் உருவத்தை இந்த ஓவியத்தில் வைத்து இதுதான் உண்மைக்கு ஏற்ற வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஒரு ட்விட்டர்வாசி.

சமூக வலைதளத்தில் ஓவியத்தை விதவிதமாக மாற்றி ட்விட் செய்து வருகின்றனர். சிலர் இந்த ஓவியத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கன்யா வெஸ்ட் என்பவரையும் இணைத்து இந்த ஓவியத்தை பதிவிடுகின்றனர்.

இந்த ஓவியத்தில் கொரிய அதிபர் கிம் ஜாங் –உன் , சவுதி நாட்டு அதிபர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் ஹிட்லர் ஆகியோர் உடனிருப்பது போன்று ஓவியத்தை மாற்றி இதுதான் சரி இப்படி இருப்பதைத்தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி பதிவிட்டுள்ளார் ட்விட்டர் சமூக வலைதளவாசி.

Published by:Saroja
First published:

Tags: Donald Trump