கொரோனா நிவாரணத்துக்கு ஓராண்டு ஊதியத்தைக் கொடுக்கும் டிரம்ப் - எவ்வளவு தெரியுமா?

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஒராண்டு ஊதியத்தை அரசுக்கே அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணத்துக்கு ஓராண்டு ஊதியத்தைக் கொடுக்கும் டிரம்ப் - எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • Share this:
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது. உலகையே ஸ்தமிக்க வைத்துள்ள கொரோனா வைரஸால் இதுவரை 55,54,427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,40,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதன் பாதிப்பு அதிகபட்சமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்ட உள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கொரோனா வைரஸால் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் டிரம்ப் அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இழப்புகளை சரிசெய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஊதியத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான ட்ரம்பின் ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய ஆண்டு வருமானமான 4,00,000 டாலரை அரசுக்கே திரும்ப அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தற்போது கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வேலை இழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் தனது ஓராண்டு ஊதியத்தை அரசுக்கே கொடுப்பதாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். 4,00,000 டாலர் என்பது இந்திய மதிப்பில் 3,03,38,000 ரூபாய் ஆகும்.
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading