ஹோம் /நியூஸ் /உலகம் /

’உலகிலேயே இந்தியாவில்தான் வரி அதிகம்’ - நொந்துகொள்ளும் ட்ரம்ப்!

’உலகிலேயே இந்தியாவில்தான் வரி அதிகம்’ - நொந்துகொள்ளும் ட்ரம்ப்!

ட்ரம்ப். (Reuters)

ட்ரம்ப். (Reuters)

”ஆனால், சீனா உடனான வர்த்தகம் எங்களுக்குள் நன்றாகவே ஒத்துப்போகிறது”.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உலகிலேயே அதிகமான வரி விதிப்பு செய்யும் நாடாக இந்தியா உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் உலகிலேயே இந்தியாவில்தான் அளவுக்கு அதிகமான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளதாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் இறக்குமதி 100 சதவிகித வரி விதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய குடியரசு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு ட்ரம்ப் பேசினார். அவர் கூறுகையில், “இது போன்ற அதிக வரி விதிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகளை இறக்குமதி செய்ய 100 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதத்துக்கு வரியைக் குறைப்பதாக இந்திய முடிவு எடுத்திருந்தது. ஆனால், இதுவும் போதாது” என்றார்.

மேலும், அமெரிக்கத் தயாரிப்புகள் என்றாலே இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறியவர், “அமெரிக்கப் பொருள்கள் மீது இந்தியா 100 சதவிகித வரி விதிக்கிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே அல்ல. ஆனால், சீனா உடனான வர்த்தகம் எங்களுக்குள் நன்றாகவே ஒத்துப்போகிறது” என்றார்.

ஐ.பி.எல் விவரங்கள்


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


மேலும் பார்க்க: இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump, Import tax, USA