முகப்பு /செய்தி /உலகம் / “இன்னுமா இதெல்லாம் நம்புற” குழந்தைக்கு ட்ரம்ப் பதில்!

“இன்னுமா இதெல்லாம் நம்புற” குழந்தைக்கு ட்ரம்ப் பதில்!

அதிபர் ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சாண்டா க்ளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) எங்கே இருக்கிறார் என்பதை தேடித்தருவதற்காக நோராட் (NORAT) என்ற கால் சென்டர் இயக்கப்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :

"சாண்டா க்ளாஸ் எங்கே இருக்கிறார்?" என்று கேட்ட 7 வயது குழந்தையிடம், “இந்த வயசுலயும் இதெல்லாம் நம்புற?” என்று ட்ரம்ப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சாண்டா க்ளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) எங்கே இருக்கிறார் என்பதை தேடித்தருவதற்காக நோராட் (NORAT) என்ற கால் சென்டர் இயக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, இந்த கால் செண்டரை தொடர்பு கொண்டு சாண்டா எங்கே இருக்கிறார் என்று கேட்பார்கள்.

இந்த ஆண்டு, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வெள்ளை மாளிகையில் இருந்து, குழந்தைகளிடம் பேசினர்.

அப்போது, சாண்டா எங்கே இருக்கிறார் என்று ஒரு 7 வயது குழந்தை ட்ரம்ப்பிடம் கேட்க, “இன்னுமா சாண்டாவை நம்புகிறாய். ஏனெனில், 7 வயது என்பது ஒரு எல்லை.. சரியா?” என்று பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. வழக்கமாக ட்ரம்ப் ஏதாவது வாயைத் திறந்து பேசினாலே கிண்டல் செய்யும் நெட்டிசன்கள், இந்த வீடியோவையும் விட்டு வைக்காமல் கிண்டல் செய்து வருகின்றனர்.

Also See..

First published:

Tags: Christmas, Donald Trump