ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜப்பானின் புதிய அரசரை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவரானார் ட்ரம்ப்!

ஜப்பானின் புதிய அரசரை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவரானார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

பதவி ஏற்று மூன்று வாரங்களே ஆன நிலையில் நாருஹிட்டோவை ட்ரம்ப் இன்று காலை சந்தித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜப்பானின் புதிய அரசர் நாருஹிட்டோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று சந்தித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் அரசர் நாருஹிட்டோவைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர். பதவி ஏற்று மூன்று வாரங்களே ஆன நிலையில் நாருஹிட்டோவை ட்ரம்ப் இன்று காலை சந்தித்தார். ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம், ராணுவ உறவு, வடகொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு எதிரான முயற்சிகள், வாஷிங்டன்- பீஜிங் இடையே தொடரும் சிக்கல்கள் ஆகியவை குறித்து இந்தப் பயணத்தில் ட்ரம்ப் கலந்தாலோசிக்க உள்ளார்.

சீனா அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்ற நிலையிலேயே நீடித்து வரும் வர்த்தக உறவு குறித்தும் ஜப்பான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பானிடம் இருந்து எவ்வித ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்காத காரணத்தால் இதுதொடர்பாகவும் ட்ரம்ப் ஜப்பானில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்: 1500 படைகளை அனுப்ப ட்ரம்ப் தயார்..!

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump