அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இது தொடர்பாக ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் கொண்டுவரலாமா வேண்டாமா என்று எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 1.50 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் 51.8 சதவீதம் பேர் ட்ரம்ப் கணக்கை திரும்ப கொண்டுவர ஆதரவு கொடுத்து வாக்களித்துள்ளனர். இதை தொடர்ந்து மக்களே பேசிவிட்டார்கள். மக்கள் குரலே, கடவுளின் குரல் (Vox Populi, Vox Dei) என்று லத்தீன் மொழியில் எலான் பதிவிட்டார். தற்போது சுமார் 2 ஆண்டுகள் கழித்து ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 80ஆவது பிறந்தநாள் ஆகும். இந்த தினத்தில் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் ரி என்டரி கொடுக்க எலான் மஸ்க் வழிவகுத்துள்ளார்.
Reinstate former President Trump
— Elon Musk (@elonmusk) November 19, 2022
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அன்றைய அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது.
இதையும் படிங்க: ' நீங்க சரியில்லை' கனடா பிரதமரை திட்டிய சீன அதிபர்.. வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு!
அங்கிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடுத்து தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசி அந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் வெளியிட்டார் டிரம்ப். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் டிரம்பின் அந்த பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி, அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, Elon Musk, Trump Tweet, Twitter