அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், ஜனவரி மாதத்திலேயே டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார். அதேசமயம், அவர் எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை எத்தனை டோஸ் எடுத்துக் கொண்டார் போன்ற தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் வலி ஏதும் இல்லை எனவும், அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.