Home /News /international /

மஞ்சள் நிறத்தில் மாறிய 58 நாள் குழந்தையின் கண்கள்.. சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

மஞ்சள் நிறத்தில் மாறிய 58 நாள் குழந்தையின் கண்கள்.. சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை

Liver Transplant Surgery : உலகிலேயே கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவில் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவமனையாக சீனாவின் ரென்ஜி விளங்குகிறது.

    கல்லிசீனாவில் பிறந்து 58 நாட்களே ஆன குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் பிறந்த பெண் குழந்தை, ஒரு மாதத்தை கடந்த போது உடலில் சில மாற்றங்கள் தென்பட்டன. குழந்தையின் எடை மூன்று கிலோவாக இருந்த நிலையில் அதன் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்ததால் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் குழந்தையின் பெற்றோர். ஆனால் நிலைமை மோசமடைய ஆரம்பித்த நிலையில், ஷாங்காயில் உள்ள ரென்ஜி மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

    அப்போதுதான் குழந்தைக்கு தீவிரமான கல்லீரல் செயலிழப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரென்ஜி மருத்துவமனை சீனாவிலேயே அதிக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது. மேலும், உலகிலேயே கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவில் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவமனையாகவும் ரென்ஜி விளங்குகிறது. இதற்கு முன்னதாக பிறந்து 80 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அதைவிட மிகக் குறைந்த வயதான பிறந்து 58 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

    இதையும் படிங்க: டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்

    கடந்த மாதம் 25 ஆம் தேதி உயிர்காக்கும் சிகிச்சையை தொடங்கினர் மருத்துவர்கள். குழந்தையின் தாயிடம் இருந்து 135 கிராம் அளவுள்ள கல்லீரல் அகற்றப்பட்டு, அதனை குழந்தையின் மெல்லிய ரத்த நாளங்களோடு இணைக்கும் சிகிச்சை நடைபெற்றது. சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 7 மணி நேரம் எடுத்து செய்து முடித்தனர் மருத்துவர்கள். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில் கல்லீரலின் செயல்பாடு சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: China, Liver Disease

    அடுத்த செய்தி