23 மணி நேரம் அறுவை சிகிச்சை.. தீக்காயம் அடைந்தவருக்கு முக மாற்று சிகிச்சை செய்த 140 பேர் கொண்ட மருத்துவ குழு .. 

அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

 • Share this:
  அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜோ டிமியோ என்பவர் 2018ம் ஆண்டு இரவு பணி முடித்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் தீ பற்றிக் கொண்டது. எனினும் அங்கு இருந்த பொதுமக்கள் சிலர், டிமியோவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்,

  இந்த விபத்தில் 90 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு கண் இமை, உதடு மற்றும் கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. முதலில் லிவிங்ஸ்டனில் உள்ள செயிண்ட் பர்னபாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். எனினும் முன்னேற்றம் ஏதுமின்றி அவர் 2 மாத காலம் கோமாவில் இருந்தார். இக்காலக்கட்டத்தில் மட்டும் டிமியோவுக்கு 20 அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  பின்னர் படிப்படியாக கோமாவில் இருந்து மீண்ட அவர், அங்கு உள்ள லாங்கோன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முகம் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக் தலைமையில் 140 பேர் கொண்ட மருத்துவ குழுவினர். டிமியோவுக்கு சுமார் 23 மணி நேரம் முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். சிகிச்சையின் முடிவில் அவர் மீண்டும் பழையே நிலைக்கு திரும்பி உள்ளார்.

  இதற்காக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த டிமியோ, தான் பழைய நிலைக்கு திரும்பியது ஆச்சரியம் அளிக்கிறது எனவும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ குழுவினர் முழு ஒத்துழைப்பு அளித்ததன் காரணமாக இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என டிமியோவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எட்வர்டோ ரோட்ரிக் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... Gold Rate | தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கம் விலை..

  அமெரிக்க மருத்துவர்களின் இந்த சாதனையால் தீயினால் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் தாமும் விரைவில் நலம்பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: