முகப்பு /செய்தி /உலகம் / உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!


உலகின் முதல் எஸ்.எம்.எஸ்

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்

உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல மடங்கு பெருகி உள்ளது. முன்பு போன்று இல்லாமல் நமக்கு தேவையான எல்லாவற்றையும் இணைய வழியை பயன்படுத்தி பெற்று கொள்கிறோம். வங்கி சேவைகள் முதல் பள்ளி வகுப்புகள் வரை எல்லாமே ஆன்லைன் மையமாக மாறிவிட்டது. இதே போன்று முன்பெல்லாம் தகவலை பரிமாறி கொள்ள மெசேஜிங் என்கிற வசதி இருந்தது. இதை எஸ்.எம்.எஸ் என்று குறிப்பிடுவோம்.

குறிப்பாக இந்த குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்தி தான் நமது தகவல்களை பரிமாறி கொண்டு இருந்தோம். தற்போதுள்ள சாட் என்கிற வசதிக்கு மூலதலமே இந்த எஸ்.எம்.எஸ் (SMS) வசதி தான். கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்.எம்.எஸ் தான் உலகை ஆண்டு கொண்டிருந்தது. அதன் பிறகு தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் பயன்படுத்த கூடிய வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற பல மெசேஜிங் செயலிகள் வந்துவிட்டன.

உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதன்படி நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு 'மேர்ரி கிறிஸ்துமஸ்' ('Merry Christmas') என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரி தான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர்.

ALSO READ |  ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளியின் வயிற்றில் இருந்து 156 சிறுநீரக கற்கள் அகற்றம்!

ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பியுள்ளார். சுமார் 14 கேரக்டர்களை இது கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் ஆண்டு முதன்முதலாக அனுப்பப்பட்டது. உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது என்று லண்டனை சேர்ந்த வோடோபோன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வ அறிவிப்பது தந்துள்ளது.

பலர் இந்த எஸ்.எம்.எஸ்-யை ஏலத்தில் வாங்க தயாராக உள்ளனர். சுமார் 170,000 யூரோக்களுக்கு இது ஏலம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்துள்ளனர். சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு உலகின் முதல் எஸ்.எம்.எஸ் ஏலம் விடப்படுவதால் பலர் ஆவலாக உள்ளனர். இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திடம் (United Nations High Commissioner for Refugees) வழங்க உள்ளதாக வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 82.4 மில்லியன் அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த பணத்தை ஐநா செலவு செய்ய உள்ளது. மக்களுடன் தொடர்பு கொள்ள முதன்முதலில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ் தொழில்நுட்பம் தான் மாபெரும் வளர்ச்சி பெற்று பல புதிய தொழில்நுட்பங்களை தொடங்க வழிவகுத்துள்ளது. முன்பை போன்று இல்லாமல் நமக்கு தேவையானதை நொடி பொழுதில் செய்வதற்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதி மிக முக்கிய அங்கமாகும்.

First published:

Tags: Christmas