Home /News /international /

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பவர்களுக்கு எந்தக் கருணையும் காட்ட வேண்டாம்- ஜோ பைடன் திட்டவட்டம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பவர்களுக்கு எந்தக் கருணையும் காட்ட வேண்டாம்- ஜோ பைடன் திட்டவட்டம்

ஜோ பைடன்

ஜோ பைடன்

தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவோருக்கு எந்த கருணையும் காட்ட தேவையில்லை. அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
    தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவோருக்கு எந்த கருணையும் காட்ட தேவையில்லை. அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் கொரோனா குறித்து ஆய்வு செய்யும் குழுவினருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அதில் ஒமைக்ரான் வகை வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்து முக்கியமாக ஆலோசனை நடைபெற்றது.

    அந்தக் கூட்டத்தில் ஜோ பைடன் பேசும்போது, “ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.

    தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்கள் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு ஆபத்தை குறைத்துள்ளன என்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை.

    தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால் பெரிய அளவில் உடல் பாதிப்பு ஏற்படுத்தாது.

    தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவோருக்கு எந்த கருணையும் காட்ட தேவையில்லை. அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.

    இப்போது பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா அலையானது, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதோரை தான் அதிகம் தாக்கும்.
    அமெரிக்காவில் 12-15 வயதுக்குட்பட்டோர் உள்பட அனைத்து மக்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.” என்று கூறினார் ஜோ பைடன்.

    கிரிக்கெட் செய்தி: ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

    திங்களன்று ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அமெரிக்கா உறுதி செய்தது. அதன் பிறகே அங்கு கெடுபிடிகள் அதிகமாகி வருகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Joe biden, Omicron

    அடுத்த செய்தி