உலகின் வேகமான ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்களுக்கு எலும்புகள் முறிந்ததால் அதிர்ச்சி!

ரோலர் கோஸ்டர்

டிசம்பர் 2020க்கு பிறகு இதுவரை 6 பேர் ரோலர் கோஸ்டரில் பயணித்து எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

  • Share this:
உலகின் மிகவேகமான ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த பலருக்கும் எலும்புகள் முறிந்ததால் பாதுகாப்பு கருதி அந்த ரோலர் கோஸ்டரின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதென்பது ஒரு அலாதியான அனுபவத்தை வழங்கக் கூடியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த அனுபவத்தின் போது பரவசத்தை உணருவார்கள். அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவிலான ரோலர் கோஸ்டர் ரைடுகளை நிறுவியுள்ளனர்.

அந்த வகையில் ஜப்பானில் தான் உலகிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைந்துள்ளது. ஜப்பானின் யமான்ஷி மாகாணத்தில் உள்ள பியூஜியோஷிடா எனும் பகுதியில் பியூஜி-கியூ ஹைலாந்து எனும் பொழுதுபோக்கு பூங்காவில் தொ-தொதோன்போ எனும் ராட்சச ரோலர் அமைந்திருக்கிறது. சான்சே டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தாரால் வடிவமைக்கப்பட்டு 2001 டிசம்பர் 21ம் தேதி திறக்கப்பட்ட இது தான் உலகிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் என்ற புகழுடன் திகழ்ந்து வருகிறது.

Also Read: தாலிபான்களால் பிரியாணி விலை எகிறப்போகுது – காரணம் இது தான்!

இந்த ரோலர் கோஸ்டர் 1.8 நொடிகளில் 172 கிமீ எனும் அசுர வேகத்தில் செல்லக் கூடியது. இந்த த்ரில்லிங்கான அனுபவத்தை பெறுவதற்காகவே உலகெங்கிலும் இருந்து பலரும் அந்த பொழுது போக்கு பூங்காவிற்கு படையெடுத்து சென்றனர்.

தொ-தொதோன்போவுக்கு முன்பு வரையில் சூப்பர் மேன்: தி எஸ்கேப் & டவர் தான் உலகிலேயே வேகமான ரோலர் கோஸ்டராக இருந்தது.

இந்நிலையில், தொ-தொதோன்போ ரோலர் கோஸ்டரில் பயணித்த சிலருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக டிசம்பர் 2020க்கு பிறகு இதுவரை 6 பேர் ரோலர் கோஸ்டரில் பயணித்து எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

Also Read:   என்னது ரூ.5 கோடிக்கு வாட்சா.. திகைக்க வைத்த ஹர்திக் பாண்டியா…!

அடுத்தடுத்து அங்கு சென்ற பலரும் தொ-தொதோன்போவில் பயணித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போது தொ-தொதோன்போ ரோலர் கோஸ்டர் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக 20 ஆண்டுகளில் ஒரே ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் அந்த ரோலர் கோஸ்டரின் உற்பத்தியாளருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயம் அடைந்த 6 பேரிடமும் சான்சே டெக்னாலஜிஸ் மன்னிப்பு கோரியுள்ளனர். இச்சம்பவத்துக்கு திடீரென கிடைக்கும் ஆக்ஸிலரேஷன் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திடீர் ஆக்ஸிலரேஷனை பொறுத்தக் கொள்ள முடியாதவர்கள் இதனால் காயம் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
Published by:Arun
First published: