ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

நியூயார்க்கில் தீபாவளிவிடுமுறை

நியூயார்க்கில் தீபாவளிவிடுமுறை

தீபாவளியைக் கொண்டாடும் இந்து, புத்த, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த 2,00,000  மக்கள் நியூயார்க்கில் வாழ்ந்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்தாண்டு முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ்  அறிவித்துள்ளார்.

  நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் மற்றும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோருடன் ஆடம்ஸ் வியாழனன்று பேசும் போது தனது உரையாடல்களில், தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்றால் என்ன என்பதைப் பற்றி  கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

  மேலும், தீபாவளியைக் கொண்டாடும் இந்து, புத்த, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த 2,00,000  மக்கள் நியூயார்க்கில் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

  75 % ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம் - அதிர்ச்சி தகவலால் ட்விட்டர் ஊழியர்கள் கலக்கம்

  இந்நிலையில், நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  "நியூயார்க் நகர பொதுப் பள்ளிகளில் தீபாவளியை விடுமுறையாக அறிவித்ததன் மூலம், இந்தக் கொண்டாட்டக் காலத்தை அங்கீகரிப்பதோடு, எண்ணற்ற மக்களுக்கு இந்த பண்டிகை குறித்த  தெளிவான செய்தியை உணர்த்த விரும்புகிறோம் ” என்றார்.

  அதே நேரத்தில், தீபாவளியைப் பற்றிக் கற்றுக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும்சி என்று அவர் கூறினார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Deepavali, Diwali, Diwali festival, NewYork