இந்தியாவில் வரும் 24 ஆண்டு தீபாவளி கொண்டாடப்படும் அதே வேளையில் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்கள் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். முக்கியமாக அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் இந்த ஆண்டு தீபாவளியை அமெரிக்காவில் உள்ள தனது அதிகாரபூர்வ கடற்படை இல்லத்தில் அமெரிக்காவில் வாழும் மற்ற இந்தியர்களோடு நேற்று கொண்டாடினார்.
வண்ணமயமான விளக்குகள் மற்றும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கடற்படை இல்லத்தில், விருந்தினர்களுக்கு பானி பூரி முதல் பல்வேறு வகையான பாரம்பரிய இனிப்புகள் வரை இந்திய உணவுகள் பரிமாறப்பட்டது. அதோடு, பிரபல பாலிவுட் பாடல்கள் ஜெய் ஹோ மற்றும் ஓம் சாந்தி போன்றவற்றிக்கு இளம் நடனக் கலைஞர்களின் குழு விருந்தினர்களை பெரிதும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில், பல இந்திய அமெரிக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் நீரா டாண்டன் மற்றும் பிடனின் உரை எழுத்தாளர் வினய் ரெட்டி ஆகியோர் அடங்குவர். இந்தியாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ரிச் வர்மாவும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சென்னையில் தனது தாத்தா பாட்டியுடன் குழந்தையாக கொண்டாடிய நாட்களை நினைவு கூர்ந்த ஹாரிஸ், தீபாவளி பாரம்பரியம் சார்ந்தது என்றார்.
அரசு விடுமுறை :
நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ், கடந்த வியாழன் காலை செய்தியாளர் கூட்டத்தில் , 2023 ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையும் பொதுப் பள்ளி விடுமுறை அட்டவணையில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்.
இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆக வாய்ப்பு - தேர்தல் எப்போது?
தீபாவளியைக் கொண்டாடும் இந்து, புத்த, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த 2,00,000 மக்கள் நியூயார்க்கில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வீட்டில் தீபாவளி:
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புளோரிடா வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2000 இந்தியர்கள் பங்கு பெற்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளி:
24-ம் தேதி அன்று இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சிறப்பு விருந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதிலிருந்தும் இந்தியர்கள் தலைநகர் நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deepavali, Diwali, Donald Trump, Joe biden, Kamala Harris, NewYork, Washington Post