முகப்பு /செய்தி /உலகம் / 7,000 பேர் பணிநீக்கம் ; ட்விட்டர், அமேசான், டெல் வரிசையில் டிஸ்னி நிறுவனம் கொடுத்த ஷாக்!

7,000 பேர் பணிநீக்கம் ; ட்விட்டர், அமேசான், டெல் வரிசையில் டிஸ்னி நிறுவனம் கொடுத்த ஷாக்!

டிஸ்னி நிறுவனம்

டிஸ்னி நிறுவனம்

இந்திய மதிப்பில் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி, அதனை, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக பயன்படுத்த தலைமை குழு முடிவெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • internat, IndiaAmericaAmericaAmerica

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மைக்ரோசாஃப்ட், அமேசான், ட்விட்டர், டெல் என பல்வேறு துறையின் நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனன. பல நிறுவனங்களும் அதன் ஊழியர்களை திடீரென பணியில் இருந்து அணுப்புவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் டிஸ்னி நிறுவனமும் இணைந்துள்ளது. டி பணியாற்றும் 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

டிஸ்னி நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக பாப் இகர் பொறுப்பேற்ற பிறகு, அந்நிறுவனத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி, அதனை, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக பயன்படுத்த தலைமை குழு முடிவெடுத்துள்ளது.

இந்த தொகையை மிச்சப்படுத்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யம் முடிவில் டிஸ்னி நிறுவனம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கொரோனா காலத்தில், 32 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Disney, Hotstar