சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நகராட்சி பணியாளர் - 11 பேர் உயிரிழப்பு

பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என்று துப்பாக்கிச்சூடு நடக்காத இடமே இல்லை என்று கூறும் படியாக அமெரிக்கா ஆகிவிட்டது.

news18
Updated: June 1, 2019, 9:44 AM IST
சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நகராட்சி பணியாளர் - 11 பேர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி (Image: WAVY-TV/NBC/via REUTERS)
news18
Updated: June 1, 2019, 9:44 AM IST
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் சக ஊழியர்களை குறிவைத்து நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

வானுயர்ந்த கட்டடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்கா மீதான பார்வையில் பயத்தை கொடுக்கிறது. நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படி சிலர் துப்பாக்கிகளை கொண்டு அப்பாவிகளை கொன்று வருகின்றனர்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களை கணக்கிட்டால் இது வெறும் 1 சதவிகிதம் தான்.

துப்பாக்கிச்சூடு என்பது தினசரி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், கடந்து செல்லும் நிகழ்வாக அந்நாட்டு அரசு இதனை கருதுகிறதா? என்றும் கேள்விகள் எழுகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என்று துப்பாக்கிச்சூடு நடக்காத இடமே இல்லை என்று கூறும் படியாக அமெரிக்கா ஆகிவிட்டது. இந்நிலையில், விர்ஜினியா மாகாணத்தில் நகராட்சி ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Loading...

படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன காரணத்துக்காக நடத்தினார் என்ற முழு தகவல் வெளியாகவில்லை.

எனினும், தாக்குதல் நடத்திய நபர் சக ஊழியர்களை குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...