Home /News /international /

ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் - இந்தியா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் - இந்தியா எச்சரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவின் முடிவுக்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜப்பான் மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தையின் போது  இந்தியாவின் முடிவு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    ரஷ்யாவிடமிருந்து 3 லட்சம்  பீப்பாய் கச்சா எண்ணெய்-யை வாங்க  இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது. ‘இதனை அரசியலாக்க வேண்டாம்  என அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்தை இறக்குமதி மூலம் பெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்-யை மற்ற நாடுகளிலிடமிருந்து  வாங்குகிறது. இதில் ஈராக்கிடமிருந்து 23 சதவிகிதமும் சவுதி அரேபியாவிடமிருந்து 18 சதவிகிதமும் இந்திய எண்ணெய் இறக்குமதி செய்கிறது.  இதேப் போல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இநதியாவின் எண்ணெய் தேவையில்  11 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது.  நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 11 விழுக்காடு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்தும் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில் அந்நாடுகள் மீதான தடை, இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் தள்ளுபடி விலையில் ரஷ்யா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்துள்ளதால், அதனை பயன்படுத்திக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.  

    முதற்கட்டமாக 3 லட்சம்  பீப்பாய் கச்சா எண்ணெய்-யை வாங்க  இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது.  இது நிறுவனத்துடன் நிறுவனம் செய்துக்கொள்ளும் ஒப்பந்தம் ஆகும். 

    Also read... ‘ஒரே ஒரு போர்’, 10 வினாடிகளில் முடிந்துவிடும் – ரஷ்ய அதிபர் புடினுக்கு நேரடி சவால் விடுத்த எலான் மஸ்க்s

    மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய்களை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது.  ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையால், ரூபாய் ரூபிள் நாணயத்தின் மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    1990- ஆம் ஆண்டுகளில் ஈரான் மீது அமெரிக்கா வர்த்தகத் தடை விதித்தபோது, ​​இந்தியா, ஈரானுடன் ரூபாய்-ரியால் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.

    1970- ஆம் ஆண்டு முதுல் 1992 வரையிலான காலகட்டத்தில், அப்போதைய சோவியத் யூனியனுடன், இந்தியா ரூபாய், ரூபிள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.

    இந்தியாவின் முடிவுக்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜப்பான் மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தையின் போது  இந்தியாவின் முடிவு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்: உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை அளித்த ரஷ்ய ராணுவம்!

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, எண்ணெய் தன்னிறைவு அல்லது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவுக்கு அறிவுரை கூற முடியாது என தெரிவித்துள்ளது. ‘. ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. ’’

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, போலாந்து, லித்துவேனியா, ரூமேனியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crude oil, India, Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி