ஹோம் /நியூஸ் /உலகம் /

’அமெரிக்காவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டவர்களும் காரணம்..’ டிரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

’அமெரிக்காவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டவர்களும் காரணம்..’ டிரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

டிரம்ப் | சுந்தர் பிச்சை

டிரம்ப் | சுந்தர் பிச்சை

எச்1 பி விசா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த விசாவால் உள்நாட்டு ஊழியர்களின் வேலை பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் டிரம்ப் பல முறை குற்றம் சாட்டி வந்தார். எனினும், தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்களுக்கான எச்-1பி விசா வழங்குவதை அவர் ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார். H2B, L மற்றும் ஜே பிரிவு விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. எனினும், ஏற்கனவே எச் 1 பி விசாவின் கீழ் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்புக்கு கூகுள் நிறுவனத்தின் சி.ஒ.ஓ சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரம் உலகளவில் மிகச்சிறப்பான நிலையை அடைந்ததற்கும், தொழில்நுட்பத்தில் தலைமை இடத்தில் இருப்பதற்கும் குடியேற்றத்தின் பங்கு அளர்ப்பரியது. அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் எச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Donald Trump, Sundar pichai