ஹோம் /நியூஸ் /உலகம் /

தண்ணீல கண்டம்.. 60 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த முதியவர்.. குளித்த சில நாளில் உயிரிழந்த சோகம்

தண்ணீல கண்டம்.. 60 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த முதியவர்.. குளித்த சில நாளில் உயிரிழந்த சோகம்

உலகின் மிக அழுக்கான நபர் அமவ் ஹாஜி

உலகின் மிக அழுக்கான நபர் அமவ் ஹாஜி

Amou Haji | உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்படும் அமவ் ஹாஜி பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் தான் அவர் குளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் அழுக்கு மனிதராக கருதப்பட்ட ஈரானைச் சேர்ந்த அமவு ஹாஜி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார். 94 வயதான அவர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல், தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

உலகின் பல பகுதிகளில் வித்தியாசமான வாழ்வியல் அல்லது பழக்கவழக்கங்களை கொண்ட மனிதர்களை நம்மால் பார்க்க முடியும். அப்படியொரு மனிதர் தான் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. இவர் வாஷிங்டன், ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட உணர்வுப்பூர்வ தாக்கங்கள் கூட அவரின் வித்தியாசமான வாழ்க்கை முறைக்கு காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

அப்படி என்ன வித்தியாசமான வாழ்க்கை முறை எனக் கேட்டால், அமவ் ஹாஜி அவருக்கென்று ஒரு தங்குமிடம் இல்லாமல் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால், கிராமவாசிகள் அவருக்காக செங்கல்லால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கி தந்துள்ளனர். அதிலும் அவர் பல காலம் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அமவ் ஹாஜி பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் தான் அவர் குளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், உடம்பில் அழுக்கு சேர்ந்து உள்ளது.

Read More : பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 23 லென்ஸ்கள் - டாக்டரின் அதிர்ச்சி பதிவு

மேலும் இவரது இந்த வாழ்வியல் முறைப்பற்றி ஈரானிய ஊடகங்கள்"தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி" என்ற தலைப்பில் சிறு ஆவணப்படம் ஒன்றையும் எடுத்துள்ளன.கடந்த 2014-ம் ஆண்டு, தெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாஜி புதிதாக சமைத்த உணவை தவிர்த்து விட்டார். அவற்றுக்கு பதிலாக, அழுகி போன முள்ளம்பன்றி இறைச்சியை சாப்பிடுவதுடன், விலங்குகளின் கழிவில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை புகைக்கும் வழக்கம் கொண்டுள்ளார் என தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில் அவரது கிராமவாசிகள் முதன்முறையாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு, கட்டாயப்படுத்தி அவரை குளிக்க வைத்துள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் வாழ்ந்து வந்த அவரை குளியலறையில் வைத்து குளிப்பாட்டி உள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் ஹாஜி தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை மரணம் அடைந்து உள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்படும் ஹாஜி தனது 94-வது வயதில் உயிரிழந்து உள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral