டயானா மரண சர்ச்சை: மன்னிப்பு கோரினார் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர்

இளவரசி டயானா

டயானாவுக்கு தீங்கு விளைவிக்க நான் அப்போது எண்ணவில்லை. இப்போது அதை செய்தோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

 • Share this:
  இளவரசி டயானாவின் மரணத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், மன்னிப்பு கேட்டார்.

  டயானாவை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் பஷீர் கூறியதாவது:

  டயானாவுக்கு தீங்கு விளைவிக்க நான் அப்போது எண்ணவில்லை. இப்போது அதை செய்தோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.டயானாவின் மரணத்துக்கு என் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறுவது நியாயமற்றது. அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.எனினும், டயானாவின் மகன்கள், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியிடம், மன்னிப்பு கேட்கிறேன், என்றார்.

  கடந்த 1981ல், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 1995ம் ஆண்டு பிபிசி ஊடகவியலாளரான மார்ட்டின் பஷீர் டயானாவை பேட்டி கண்டார். அரசு குடும்பத்தின் உள்விவகாரங்கள் ரகசியமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த பேட்டியின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து டயானா பேசினார்.

  தனது திருமணத்தை தாண்டிய தொடர்பு, இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இடையே இருந்த உறவு என அரண்மனை ரகசியங்கள் பலவற்றை வெளிப்படையாக கூறினார். இந்த பேட்டி ஒளிபரப்பாக உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டயானாவின் இந்த பேட்டி எலிசபெத் ராணியை கோபமடைய செய்தது.

  இந்த பேட்டிக்கு பிறகு ஊடகங்கள் என்றாலேயே விலகி இருக்க தொடங்கினார் டயானா. இதற்கிடையே, கடந்த 1997 ஆம் ஆண்டு 31ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு அஞ்சி காரில் வேகமாக சென்றபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டயானா பேட்டியின் பின்னணி குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் டைசன் விசாரணை நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.

  அதில் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர், இளவரசி டயானாவை பேட்டி எடுக்க கையாண்ட முறையற்ற வழிகளை, பி.பி.சி., மூடி மறைத்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. பின், டயானாவின் மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், பி.பி.சி., நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: