1971-ல் வங்கதேச விடுதலைப் போரின் போது, டாக்காவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த காளி கோயில் பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. தற்போது புனரமைக்கப்பட்ட காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்து வழிபாடு செய்தார்.
1971-ல் வங்கதேச விடுதலைப் போர் நடந்தது அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினால் இந்த காளி கோயில் அழிக்கப்பட்டது, அப்போது பல பக்தரக்ள் உயிரிழந்தனர், இந்நிலையில் புனரமைக்கப்பட்ட காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டாக்காவில் திறந்து வைத்தார்.
திறந்து வைத்து அவர் பேசியதாவது: “வரலாற்று சிறப்பு மிகுந்த காளி கோயிலை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் இடிக்கப்பட்ட கோயிலை மீட்டெடுக்க இந்திய, வங்கதேச அரசுகளும், இரு நாட்டு மக்களும் உதவியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, வங்கதேச மக்கள் இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக பிணைப்பின் சின்னமாக இக்கோயில் உள்ளது. எனது வங்கதேச பயணத்தின் ஒரு மங்களகரமான நிகழ்ச்சியாக திறப்பு விழா அமைந்தது” என்று தெரிவித்தார்.
50 ஆண்டுகள் கழித்து இந்தக் காளி கோயில் மீண்டும் புத்துயிர் பெற்றது அங்கு வங்கதேசத்தின் இந்துக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த் புனரமைக்கப்பட்ட கோயிலில் வழிபாடு நடத்தினார்.
இந்தக் கோயில் பாகிஸ்தான் படையினரால் தீவைத்து கொளுத்தப்பட்டது, இதில் பலர் இறந்தனர். இந்த ஆபரேஷனுக்கு ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்று பாகிஸ்தான் ராணுவம் பெயர் வைத்திருந்தது. அதாவது வங்கதேச விடுதலை இயக்கத்தை அழிக்க பாகிஸ்தான் ராணுவம் ஏற்படுத்தியிருந்த நடவடிக்கை இது.
பங்களாதேஷின் 169 மில்லியன் மக்கள் தொகையில் 10% இந்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Ramnath Kovinth