கொரோனா உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் டெக்ஸாமெதாசோன்: மிகப்பெரும் சாதனை - பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை

கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் டெக்ஸாமெதாசோன் மருந்து குணப்படுத்துகிறது என்று பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் டெக்ஸாமெதாசோன்: மிகப்பெரும் சாதனை - பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
டெக்ஸாமெதாசோன்
  • Share this:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதுவரையில் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறிவருகின்றனர்.

இந்தநிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், டெக்ஸாமெதோசான் என்ற மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மருந்து மிகக் குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள மருந்து. மிகக் குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராட் மருந்து என்றும் தெரிவித்துள்ளனர். வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது.

ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு பங்கு குறைக்கிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இந்த ஆய்வுக் குழுவின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் பீட்டர் ஹார்பி, ‘இதுவரை கோவிட் நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. இது பெரிய முன்னேற்றம் என்று இந்த தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசிடம் இந்த மருந்து 2,00,000 கையிருப்பில் உள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான டெக்ஸாமெதோசான் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading