• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பெண்களுக்கு உரிமை அளிப்போம் என்ற தாலிபான்கள் வாக்குறுதி பம்மாத்தா?

பெண்களுக்கு உரிமை அளிப்போம் என்ற தாலிபான்கள் வாக்குறுதி பம்மாத்தா?

நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஆப்கன் பெண்கள்.

நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஆப்கன் பெண்கள்.

மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஆஃப்கன் மக்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இந்த உறுதிமொழியை தாலிபான்கள் காப்பாற்றுவார்களா, இல்லை காற்றில் பறக்க விடுவார்களா என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது.

  • Share this:
    மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஆஃப்கன் மக்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இந்த உறுதிமொழியை தாலிபான்கள் காப்பாற்றுவார்களா, இல்லை காற்றில் பறக்க விடுவார்களா என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது.

    இந்த சந்தேகங்களுக்கு காரணம் இல்லாமலில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் தனித்த மனித உரிமைகள் அமைப்பு கூறுகையில் 14 பெண்கள் கொல்லப்பட்டனர், 22 பெண்கள் படுகாயமடைந்தனர். இது இலக்கு வைத்து தாக்கப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்ட தரவாகும். இதில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் பணியாற்றும் பெண்கள். தொலைக்காட்சி தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்ப்பவர்கள், வாக்சின் போடுபவர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.

    அமெரிக்கா ஆப்கான் ராணுவத்திற்கு பயிற்சி அளித்தும் ஒரு தோட்டா கூட பாயாமல் தாலிபான்கள் எளிதாக ஆட்சியைப் பிடித்து விட்டனர், ராணுவத்தினர் தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆப்கான் ராணுவத்தையும் அரசையும் சாடியுள்ளார்.

    தாலிபான்கள் ஆப்கானைப் பிடித்த உடன் காபூல் விமான நிலையத்தில் ஆப்கானை விட்டு வெளியேறிய முட்டி மோதியவர்கள் பெரும்பாலும் ஆண்களே என்று கூறப்படுகிறது. வீட்டுப் பெண்களை அத்ரதையாக விட்டுவிட்டு ஆண்கள் தப்பியோட முயற்சித்தனர். தாய், சகோதரிகள், மனைவி என்று இவர்கள் தாலிபான் பிடியில் விட்டு விட்டு தப்புகின்றனர்.

    பெண்கள் இல்லாதது அவர்கள் தாலிபான் பிடியில் இருக்க விட்டு விடுவது மீண்டும் தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் தைரியத்துடனும், மன உறுதியுடனும் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளியதை அறிவுறுத்துகிறது.

    பெண்களுக்கு மிக மோசமான இடமாகவே ஆப்கானிஸ்தான் இருந்து வந்துள்ளது. இந்த நிலைக்கு இஸ்லாமியத்தைக் குறை கூற முடியாது, பெண்கள் மீதான அடக்குமுறை பழங்குடியினரின் கறாரான அடக்குமுறை விதிமுறைகளையொட்டியது. இஸ்லாமியத்தின் மதச்சார்பற்ற தன்மையும் புறக்கணிக்கப்பட்டு பழங்குடி பெரிசுகளின் ஆதிக்கம் எப்போதும் பெண்ணுரிமைகளுக்கு எதிராகவே அங்கு இருந்துவந்துள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன்பாக தாலிபான்கள் தூக்கி எறியப்பட்டதிலிருந்து அவர்களுக்குக்கிடைத்த கல்வி உள்ளிட்ட சுதந்திரம் நகரம் சார்ந்ததே, கிராமப்புற ஆப்கானில் மாற்றம் ஏற்படவில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரத்துக்காகவும் வாழ்வுக்காகவும் போராட வேண்டியுள்ளது. இப்போதும் அந்த நிலையே, தாலிபான்களிடம் ஆட்சி போயிருப்பது உண்மையில் பெண்களுக்குத்தான் பெரிய தீங்கு.

    அமெரிக்க ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் 2021-ல் வெளியிட்ட தகவல்களின் படி 2020 வரை ஆப்கான் போலீஸில் 3.25% பெண்கள் உள்ளனர். சீருடை அணிந்த ஆப்கான் ராணுவத்தில் 1% க்கும் குறைவே பெண்கள்.

    குர் ஆனில் சொல்லப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்கின்றனர் தாலிபான்கள். பெண்கள் மீது ஒருமுனை தாக்குதல் அல்ல, பலமுனை தாக்குதல் நடைபெறும் ஒருபுறம் தந்தை வழி ஆணாதிக்க மதிப்பீடுகளுடன் போராட வேண்டும், இன்னொரு புறம் மத அடிப்படை வாத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டும். ஈராக்கில் யாஜிடி பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கியது போல் ஆப்கானிலும் நடக்கும் என்றே பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    ஆகவே தாலிபான்களின் பெண்ணுரிமை பேச்செல்லாம் சுத்த பம்மாத்து என்ற கருத்தே அங்கு நிலவுகிறது. எது எப்படியாயினும் பெண்கள் அங்கு ஒரு நிச்சயமற்ற சமகாலத்தையும் எதிர்காலத்தையுமே எதிர்கொள்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: