இந்தியப் பொறியாளருக்கு விசா மறுத்த அமெரிக்க அரசு மீது வழக்கு!

விசா மறுக்கப்பட்டதுக்கான காரணம் போதியதாக இல்லை என்றே அந்த நிறுவனம் இந்தியப் பொறியாளருக்காக அமெரிக்க அரசு மீதே வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியப் பொறியாளருக்கு விசா மறுத்த அமெரிக்க அரசு மீது வழக்கு!
ஹெச்1பி விசா
  • News18
  • Last Updated: May 17, 2019, 10:41 PM IST
  • Share this:
இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு ஹெச்1பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசை எதிர்த்து அந்நாட்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப மாகாணமாகக் கருதப்படும் எக்ஸ்ட்ரா சொலியூஷன்ஸ் இன்னும் நிறுவனம் சந்திர சாய் என்ற 28 வயது இளைஞரை சிஸ்டம் அனாலிஸ்ட் என்னும் பணிக்காக தேர்ந்தெடுத்திருந்தது. சந்திர சாய்க்காக அந்நிறுவனம் ஹெச்1பி விசா நடைமுறையின் கீழ் விசா கோரியிருந்தது.

ஆனால், ஹெச்1பி விசாவுக்கு ஏற்ற தகுதிகள் நிறைவாக இல்லாததால் அவரது விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து, திறமை மிகுந்த ஒரு பொறியாளரை தகுதி நீக்கம் செய்ததில் போதிய விளக்கம் அளிக்கவில்லை என அந்த அமெரிக்க நிறுவனம் அமெரிக்க அரசாங்கம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணராகவோ திறன் மிக்கவராக இருந்தால் அந்நபருக்கு ஹெச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவிலேயே பணியாற்றுவதற்கான விசா வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், விசா மறுக்கப்பட்டதுக்கான காரணம் போதியதாக இல்லை என்றே அந்த நிறுவனம் இந்தியப் பொறியாளருக்காக அமெரிக்க அரசு மீதே வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் பார்க்க: லேசர் விளக்குகளால் மின்னும் ஈஃபிள் டவர்!
First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...