சுமார் 2 லட்சம் பேரைத் தாக்கிய டெங்கு... 950 பேர் பலி - பெரும் துயரத்தில் பிலிப்பைன்ஸ்

சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுள் 12,500 பேர் மரணமடைவதாகவும் குறிப்பிடுகிறது.

Web Desk | news18
Updated: September 5, 2019, 10:56 PM IST
சுமார் 2 லட்சம் பேரைத் தாக்கிய டெங்கு... 950 பேர் பலி - பெரும் துயரத்தில் பிலிப்பைன்ஸ்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 5, 2019, 10:56 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டின் இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாடு டெங்கு நோயால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் 2,29.736 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 958 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக் கணக்கு ஜனவரி 1, 2019 முதல் ஆகஸ்ட் 17, 2019 வரையில் எடுக்கப்பட்ட கணக்காகும்.

இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 1,10,970 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டும் 582 பேர் மரணமடைந்தும் உள்ளனர். டெங்கு பாதிப்பு குறிப்பாக 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளையே அதிகம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி டெங்குவை தேசிய தொற்றுநோயாக அறிவித்த பிலிப்பைன்ஸ் இதன் மூலம் சர்வதேச உதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுள் 12,500 பேர் மரணமடைவதாகவும் குறிப்பிடுகிறது.

மேலும் பார்க்க: பூமியைவிட பெரிய ஆஸ்டிராய்டு எதுவும் நம்மைத் தாக்க வாய்ப்பில்லை - ஆய்வாளர் விளக்கம்

அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..!

Loading...

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...