இலங்கையில் வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா!

மாதிரிப்படம்

ஆபத்தான டெல்டா வகை கொரோனா இலங்கையில் வேகமாக பரவி வருகிறது. கொழும்புவில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 30 சதவீதம் டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டதாகும்

 • Share this:
  இலங்கை நாடு கொரோனா மூன்றாவது அலையில் சிக்கி தவித்துவரும் நிலையில், டெல்டா வகை வைரஸ் அங்கு வேகமாக பரவிவருகிறது.

  சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த கொரோனா  வைரஸ் உருமாறி பரவிவருவதால், அதனை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. அதிலும், டெல்டா வகை கொரோனா மீகவும் ஆபத்தானவை என்றும் இவை எளிதாக மற்றவர்களுக்கு பரவும் தன்மையை கொண்டவை என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இத்தகைய, ஆபத்தான டெல்டா வகை கொரோனா இலங்கையில் வேகமாக பரவி வருகிறது. கொழும்புவில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 30 சதவீதம் டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டதாகும். எனவே, போக்குவரத்தில் தளர்வுகள் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு சுகாதார வல்லுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  மேலும் படிக்க: டெல்டா, டெல்டா பிளஸ், எப்சிலான், லாம்ப்டா- கொரோனா உருமாறிய வைரஸ் வகைகளின் தாக்கம் என்ன?


  தெற்கு மாகாணங்களான காலி, மற்றும் மாதாரா,  வடக்கு மாகாணங்களான யாழ்ப்பாணம் மற்றும் கிலிநொச்சி ஆகியவற்றிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதார சேவைகளுக்கான துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!


  இலங்கையில் தற்போது கொரோனா மூன்றாவது அலை  பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
  Published by:Murugesh M
  First published: