அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமானது!

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

டெல்டா வகை கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  முகக்கவசம் மற்றும் ஊரடங்கை ரத்து செய்த பல்வேறு நாடுகள், மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அம்முடிவை மறுபரிசிலனை செய்ய திட்டமிட்டுள்ளன.

  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரிட்டனில் 68 சதவீதம் பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 19ம் தேதி சுதந்திர தினம் என அறிவிக்கப்பட்டு, ஊரடங்குக்கும் முகக்கவசம் அணிவதற்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் விலக்கு அளித்தார்.

  இந்நிலையில் அங்கு மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பு உத்தரவிட்டது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

  Also read: "மீன்களும், ஆமைகளும் இறக்கின்றன" - தந்தையுடன் சேர்ந்து கடலை சுத்தம் செய்யும் 4 வயது சிறுமி!

  அமெரிக்காவில் 31 மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, அங்கு டெல்டா வகை கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொலம்பியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

  கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் கடந்த மாதம் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளித்தது. ஆனால் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரிப்பால், உள் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் சில கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

  Also read: Asteroid | பூமியை நோக்கி வரும் ராட்சத ஸ்டேடியம் அளவிலான விண்கல்! ஆச்சர்ய தகவல்கள் இதோ..!

  ஆஸ்திரேலியாவில் கிரேட்டர் சிட்னியில் அமல்படுத்தப்பட்ட முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதி, தற்போது நியு சவுத்வேல்ஸ் மாகாணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

  அதேநேரம், ஹங்கேரி, இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முகக்கவசம் அணிவதிலிருந்து முற்றிலும் விலக்கு அளித்துள்ளன.
  Published by:Esakki Raja
  First published: