18 நாடுகள் வழியே ‘டெல்லி டூ லண்டன்’ - உலகின் நீண்ட தூர பேருந்து பயண சேவை... கட்டணம் எவ்வளவு தெரியுமா...?

டெல்லி- லண்டன் பஸ்

உலகின் மிக நீண்ட தூர பேருந்து பயணம், டெல்லி - லண்டன் இடையே, அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது.

 • Share this:
  குருகிராமைச் சேர்ந்த அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற சுற்றுலா நிறுவனம், நீண்ட தூர பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு 18 நாடுகள் வழியே, 70 நாட்கள், 20,000 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருக்கும். மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, ரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை இந்த பேருந்து கடந்து செல்லும்.

  ஒரு நபருக்கு கட்டணமாக 15 ,00,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 20 பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், முழு பயணத்திற்கும் கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும் என்றும் சுற்றுலா நிறுவனம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க...கடந்த 24 மணி நேரத்தில்.... இந்தியாவில் கொரோனா பாதிப்பு & உயிரிழப்பு எவ்வளவு?


  பயணிகள் சொகுசாக பயணம் செய்யும் அளவிற்கு பேருந்தில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. பஸ் டூ லண்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயணிக்க 10 விசாக்கள் தேவைப்படும்.
  Published by:Vaijayanthi S
  First published: