சர்வதேச அளவில் மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இங்கு அரியவகை நோய்க்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவை மற்ற பணக்கார நாடுகளை விடவே குறைந்த செலவில் செய்கிறார்கள். இதனால் தான் வெளிநாடுகளில் இருந்து பலரும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா வருகிறார்கள்.
அப்படித்தான் ஈராக்கை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு அரியவகை கால் அறுவை சிகிச்சையை டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரு கால்களிலும் நான்கு எலும்புகளின் வளர்ச்சி குறைபாடுடன் இருந்துள்ளது.இதை சரி செய்ய டெல்லியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அவரது குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.
அங்கு எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3-டி பிரின்டிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் பாதிப்பின் அளவை துல்லியமாக கண்டறிந்துள்ளனர். அப்போது தான் சிறுவனின் இரு கால் பாதங்களின் எலும்புகள், தொடைகளின் எலும்புகள் வளர்ச்சி குறைபடுடன் வளர்ந்து தவறான வடிவத்தை அடைந்துள்ளது.எனவே, இரு கால்களிலும் bone femur and tibia எலும்புகளை சரிசெய்து வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும். மூன்று எலும்புகள் மோசமாக வளைந்து வடிவம் மாறிய நிலையில், அவற்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அதை நேர்படுத்தியுள்ளனர். பாதிப்பு குறைவாக உள்ள ஒரு எலும்பு பகுதியையும் பின்னர் சரி செய்துள்ளனர். இரு கட்டங்களாக இந்த அறுவை சிகிச்சையை 5 நாள்களில் மருத்துவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு தற்போது சிறுவன் குணமடைந்துள்ளார். இனி அவரது எலும்புகள் வலுவடைந்து சிறப்பாக வேலை செய்யும் நடக்கவும் உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரப்பி பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.ஈராக் நாட்டில் அந்த சிறுவனுக்கு மருந்துகள் கொடுத்து ஹார்மோன் வளர்ச்சி மூலம் நடக்க வைக்க பார்த்துள்ளனர். ஆனால் நான்கு எலும்புகளும் மோசமான பாதிப்பை கண்டதால் அங்கு மருத்துவர்களால் சரிசெய்ய முடியவில்லை. ஆனால், டெல்லி மருத்துவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நோய் தீவிரத்தை கண்டறிந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் வறுமை குறைவு.. பட்டினி விகிதம் அதிகம் - புள்ளி விவரங்கள் சொல்லுவது என்ன?
"சிறார்களுக்கு எலும்பு வளர்ச்சி குறைபாடு ஜெனிட்டிக்கலாகவோ, சத்து குறைபாடு காரணமாக ஏற்படலாம். ஆனால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் அது மோசமான நிலையை உருவாக்கிவிடும். எனவே மருத்துவர்களை நம்பிக்கையுடன் உரிய நேரத்தில் நாடுவது அவசியம் என" என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆஷிஷ் சவுத்ரி அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.