முகப்பு /செய்தி /உலகம் / சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்....

சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்....

அதிபர் டிரம்ப் மற்றும் ஜேம்ஸ் மேட்டீஸ்

அதிபர் டிரம்ப் மற்றும் ஜேம்ஸ் மேட்டீஸ்

ஜேம்ஸ் மேட்டீஸ் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து, டொனால்டு டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. இதனை பயன்படுத்தி அங்கு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதிக்கத் தொடங்கியதால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சிரியா சென்றன. தொடர்ந்து நடைபெற்று வந்த போரில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறிய, அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்களது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இது நேட்டோ நாடுகளுக்கு மட்டுமல்லாது, அமெரிக்க எம்.பி.க்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜேம்ஸ் மேட்டீஸ் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து, டொனால்டு டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல், டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வரும் பிப்ரவரி மாத இறுதியோடு ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பணியில் இருந்து விடை பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also see...

First published:

Tags: Donald Trump, Syria